Spirituality

A path of guidance, devotion, and service to the community.

A portrait or a moment from a gathering
குரு வரலாறு

யார் இந்த பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்?

The guru in meditation

பிரம்மரிஷிக்கெல்லாம் ரிஷி தலைமை ரிஷியாம்….!!!

கௌசிகா மன்னனாகப் பிறந்து சத்ரியனாக வாழ்ந்து பிரம்மரிஷி ஆனவரே….!!!

தன்னுடைய நாட்டு மக்கள் தானிய பஞ்சகாலத்தில் மக்களுடைய பசிப் பட்டினியைப் பார்த்து மனம் தாங்காமல் என்ன செய்வதென்றே தெரியாமல் சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது, துறவி ஆசிரமத்தில் இருந்து தங்களுக்கு மட்டும் உணவை கொண்டுவந்த துறவியைப்பார்த்து உங்களுக்கு மட்டும் உணவு எங்கிருந்து வந்தது என்று கேட்க, காமதேனுபசுவின் கன்று நந்தினி என்கிற தெய்வப்பசுவால் உணவு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூற அதை சிறிது காலம் எங்களிடம் கொடுங்களென்று கேட்க அதை மறுக்க நானும் மக்களின் பசியை போக்க பிரம்மரிஷி ஆவேன் என்று வசிஷ்டரிடம் சவால் விட்டவரே….!!!

தசரத வம்ச குல குரு பிரம்மரிஷிகளில் ஒருவர் வசிஷ்டர் காமதேனுபசுவின் கன்று நந்தினி என்கிற தெய்வப்பசு அவரிடம் உள்ளது. அது என்ன கேட்டாலும் கொடுக்கும் அதை பிரம்மரிஷிகள் மட்டுமே வைத்திருப்பார்கள் அதைதெரிந்து கொண்டதால் வசிஸ்டர் உம்மை பார்த்து சத்ரியன் பிரம்மரிஷியாக முடியாது என்று சவால்விட அதைவென்றவரே….!!!

தாங்கள் கடுமையான தவம் கொண்ட பொழுது தேவேந்திரனாகிய இந்திரன் தவறாகக் கருத்தில் கொண்டு தாங்கள் தவத்தைக்கெடுக்க அக்னிதேவனை வர்ணதேவனை மற்றும் வாயுதேவனை அனுப்பியும் தன் சபலபுத்தியால் திலோத்தமை கேட்டதால் ரதிமதனையும் மேலும் ரம்பை ஊர்வசியும் இத்தனை பேரையும் அனுப்பி தவத்தைக் கெடுக்க முடியாத இந்திரனை தோற்கடித்தவரே….!!!

இந்திரனும் துருவாசகரும் செய்த சதியால் அடைக்கலம் நாடகமாடிய மேனகை, விஸ்வாமித்திரரை மயக்கியதால் தனக்கொரு பெண்குழந்தை சகுந்தலை பிறந்தார். இதனால் தனது முழுசக்தியையும் இழந்தார். மீண்டும் தவம்புரிய தொடங்கினார். அந்தகாலகட்டத்தில் கண்வர்ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்தாள் சகுந்தலைக்கும் துஷ்யந்தன் மகாராஜாவிற்கும் காதல் மலர்ந்தது. பரதன் என்கிற மகன் பிறந்தான். துருவாசகர் சாபத்துக்கு ஆளானசகுந்தலை யார்மனதில் உள்ளாயோ அவர் நினைப்பிலிருந்து நீ விலகுவாய் என்றர். அதனால் காட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். பிறகு விஸ்வாமித்திரரை சந்திக்கிறார் அப்போது தான் தெரியும் சகுந்தலை தன் மகள் பரதன் பேரன் என்று அதை தெரிந்து அவர் ஆனந்தத்தில் இந்த உலகிற்குஎன் பேரனின் பெயரை வைப்பேன் என்று ஆனந்தத்துடன் பாரத கண்டம் என்று பெயர்சூட்டியவரே….!!!

வரங்களும் புகழும்

தர்மத்தின் காவலர்

Sri Rama or the guru's lineage

பலஆயிரம் ஆண்டுகள் தவம் புரிய சென்ற காலகட்டங்களுக்கு இடையே நாடு தர்மம் முற்றிலும் அழிந்துபோன காலத்தில் நாடு உயிரற்ற நிலையில் இருந்தபோது பிறகு தர்ம தேவனின் சோதனைக்கு நீங்கள் ஆளான போது சிறிதும் சுயநலம் அற்ற இரக்கத்தின் பெருக்கு நீர் என்பதை நிரூபித்துவிட்டீரே….!!!

நாட்டை மீண்டும் உயிர் பெற செய்தீர். உலக மக்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பால் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தீர் அதனால் தர்மதேவன் தங்களை அன்று முதல், “விஸ்வாமித்திரர்” என்று அழைக்கப் பட்டீர் விஸ்வம் என்றால் உலகம் மித்திரன் என்றால் நண்பன் உலக நண்பன் விஸ்வாமித்திரர் என்று பெயர்சூட்டப்பட்டீரே….!!!

அரிச்சந்திரனின் பெயர் உலகம் உள்ள வரை மக்கள்வாயால் போற்றப்படும் என்று வரம் கொடுத்தவரே….!!! (கொடுத்து மீண்டும் சக்தியை இழந்து தவம்புரிய தொடங்கியவரே)

திரிசங்கு, வாழ்வில் எல்லா கடமைகளையும் செம்மையாக முடித்து விட்டு சொர்க்கம் போக வேண்டும் என்று வசிஷ்டரிடம் ஏங்கினேன். இறந்தால் தான் சொர்க்கம் போக முடியும் என்று கூறினார் இறவாமல் உடலோடு சொர்க்கம் போக வேண்டும் என்று அவரோடு மன்றாடினேன் ஆனால் முடியாது என்றார் அப்படியானால் வேறு ஒரு குருவை நான்பார்த்துக் கொள்கிறேன் என்றேன் அதற்கு அவர் என்னால் முடியாதது வேறு எவரால் முடியும் என்று என்னை தாழ்வாக நினைத்ததால் நீ தாழ்வான பிழையெனபோ என்று சபித்து விட்டார் குல குரு வசிஸ்டர். திருசங்குவிற்கு அவர்செய்த புண்ணிய பலன்களை கொண்டு உடலோடு சொர்க்கத்திற்கு செல்லசொர்க்கத்தையே படைத்தவரே….!!! (மீண்டும்முழுசக்தியும் இழந்து தவம்புரியதொடங்கியவரே)

முன் மொழிந்தார் பிரம்மரிஷி வசிஸ்டர்த சரதனுக்கும் கௌசல்யாவிற்கும் புத்திர பாக்கியம் வரம் கொடுத்தவரே….!!!

கௌசல்யா புத்திர பாக்கியம் பெற்று ஸ்ரீராமனைக் கடவுளாக இந்த உலகிற்கு பெற்றதால் கௌசல்யா பெயரை வைத்து கௌசல்யாசுப்ரபாதம் கொடுத்தவரே….!!!

ஹரிச்சந்திர பரம்பரை ஸ்ரீராமன் பிறந்த உலகிற்கு சூரிய உதயத்தின் போது கௌசல்யா சுப்ரபாதத்தோடு விடியல் ஆக்கியவரே….!!!

அரிச்சந்திர பரம்பரை ஸ்ரீராமனுக்கு காயத்ரி மந்திர தீட்சையும்….!!! பலவிதமான வித்தைகளையும் கற்றும்,” பலே அதிபலே” மந்திரத்தை உபதேசம் செய்தும்….!!! இந்த உலகிற்கு கடவுளாக காண்பித்து குருவின் உச்சத்தை தொட்டவரே….!!!

காயத்ரி மந்திரம்

பிரம்மரிஷி பட்டமும் காயத்ரி மந்திரமும்

The pancha-mukha lamp ritual

இந்த உலகில் பலரால் தவத்தை இழந்து மீண்டும் கடுமையான தவத்தைப் புரிந்து தவத்தின் உச்சியைத் தொட்டு பார்வதிஅம்மையார் காட்சி கொடுக்க பஞ்சமுக விளக்கை ஏற்று என்று வழி மொழிந்தார்….!!! ஐயன் சிவனைக் காண அதற்கு தன்னுடைய காயத்தை (தேகத்தை) பஞ்சமுக விளக்கில் தீபமாக ஏற்றினார்….!!! ஐயனும் காட்சி கொடுக்க….!!! (கௌசிகன்) விஸ்வாமித்திரர் ஓம் பூர் புவ ஸ்வாஹ தத் ஸவிதூர் வரேனியம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநாஹ பிரசோதயாத் என்ற பாடலை பாடி பரவசப்படுத்தினார். ஐயன் காயத்ரி மந்திரம் என்று பெயர்படும் என முன்மொழிந்தார்….!!!

அம்மையார் காயத்தை திரியாக்கியதால் காயத்ரி மந்திரம் என்று முன் மொழிந்தார்….!!!

ஐயன், உலகமக்கள் அனைவரும் இந்த மந்திரத்தை தாய்மந்திரமாக போற்றப்பட வேண்டும் என்று வழி மொழிந்தார்….!!!

(கௌசிகன்) விஸ்வாமித்திரர்க்கு பிரம்மரிஷி பட்டம் எம்பெருமான் சிவபெருமானால் பட்டம் பெற்றவரே நீர்….!!!

தன்னுடைய மகளையும் பேரனையும் துஷ்யந்தன்னுடன் சேர்த்து வைக்க துஷ்யந்தனிடம் தலை வணங்கி, பரமேஸ்வரனைத்தவிர வேறுயாருக்கும் தலை வணங்காத பந்த பாசத்தில் உம்மை சிக்கவைத்து நாடகமாடி பணிவு என்கிற திருமந்திரத்தை எம்பெருமான் உபதேசம்செய்யதார்….!!!

உனது பெயரும் புகழும் உலகம் இருக்கும் வரை நிலைக்கும் என வாழ்த்தினார்….!!!

சிவனிடம் உங்கள் பாதத்தில் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று வரம் கேட்க, நட்சத்திரமாக இந்த உலகத்தில் என்றென்றும் ஒளிர்வாய் என்று பரமேஸ்வரனிடம் வரம் பெற்றவரே நீர்….!!!

பரமேஸ்வரித்தாய் விடி வெள்ளியாக திகழ்வாய் என்ற வரம் பெற்றவரே நீர்….!!!

ராமகுல வம்சம் குலகுரு வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி, பிரம்மரிஷிகெல்லாம் ரிஷி தலைமைரிஷி என்ற பட்டத்தை பெற்றீறேநீர்….!!!

குருஜி

அடியணை பற்றிய பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் தியான பீடம்

From the guru pooja vizha

நடத்தி வருபவர்: DR.பிரம்மஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி விஸ்வாமித்திரன் ஆச்சாரியார் குருஜி (DR.ஜி.டி.கிருஷ்ணகுமார்) ஆகியயாம்.

பிரம்மரிஷி விஸ்வாமித்திரருக்காக அடியேன் கடந்த 10 ஆண்டு கால குருபூஜை விழா நடத்தி வருகிறோம், அதனைப் பற்றிய தகவலும், எம்மை அவர் ஆட்கொண்டு இந்த உலகிற்கு சமர்ப்பிக்கிறாரோ அதுவும் இங்கு பகிரப்படுகிறது.

அடியேன் கடந்த 10 ஆண்டுகள் 2016 ஜனவரி 3 அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழா பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு நடத்தி வருகிறோம். திருமஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், நெய், தேன் அபிஷேகமும்! புஷ்ப அலங்காரமும்! செய்தும் பிரம்மரிஷி விஸ்வாமித்திரருக்கு 108 கிலோ ருத்ராட்சத்தால் அபிஷேகம்! செய்யப்பட்டு அங்கேவரும் பக்தபெருமக்கள் அனைவருக்கும் ருத்ராட்ச பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. 1008 வலம்புரி சங்கு அபிஷேகமும்! யாகசாலை தீர்த்தம் அபிஷேகமும்! இராமேஸ்வரம் 24 தீர்த்தங்களும்! விஸ்வாமித்திரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

குருபூஜை அன்று சுவாமியை சப்பரத்தில் ஊர்வலமாக அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து வந்து 2000 பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து காயத்ரிமந்திரம் உபதேசம்! செய்தும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னம் விருந்து — தலைவாழை இலையில் உப்பு, வடை, பாயாசத்துடன், இரண்டு பொறியல், கூட்டு, அப்பளம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய், நெல்சோறு — வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் விருந்து குறையில்லாமல் படைத்துவருகிறோம்.

ஆலய சேவைகள்

1008 வலம்புரி சங்காபிஷேகம் செய்யப்பட்ட திருக்கோவில்கள்

The panchaloha Kamadhenu award statue
  • கோவை மாதம்பட்டி சகஸ்ரலிங்கேஸ்வரர் திருக்கோவில் — 2023 சிவராத்திரி அன்று 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • கோவை ஆலந்துறை அஷ்டபைரவர் திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • கோவை பிச்சனூர் அருள்மிகு நாகசக்தி அம்மன் திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • உடுமலைப்பேட்டை ராகுல்பாவி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • உடுமலைப்பேட்டை ஆத்து கிணத்துப்பட்டி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • உடுமலைப்பேட்டை பாப்பான்குளம் வெங்கடாசலபதி திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜை
  • கோவை கணபதி பிளேக் மாரியம்மன் திருக்கோவில் — 1008 வலம்புரி சங்காபிஷேக பூஜையும் 108 குத்துவிளக்கு பூஜையும்
  • காளப்பட்டி மாரியம்மன் திருக்கோவில் — 1008 குத்துவிளக்கு பூஜை

அடியேன் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் விருது தேர்ந்தெடுத்த மாமனிதர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட 18 கிலோ எடை கொண்ட காமதேனு சிலை பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் குரு பூஜை விழாவில் முறையாக விருது வழங்கப்பட்டு வருகிறது.

விஸ்வாமித்திரர் தியான பீடம் கொடி 9ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

விருது

அடியனுக்கு பிரம்மஸ்ரீ விருது

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோவில் பத்மஸ்ரீ அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் (தம்புராட்டி) அவரால் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோவிலில் பிரம்மஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு
“விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் — உலக நண்பன் விஸ்வாமித்திரர்.”
— தர்மதேவன் அருளிய பெயர்
குருபூஜை விழா — 2026

11ஆம் ஆண்டு பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் குருபூஜை விழா

கடந்த 10 ஆண்டுகாலம் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் குருபூஜை விழா சீரும் சிறப்புடன் நடத்தி வந்துள்ளேன் என்பதை உங்கள் முன் புகைப்படங்களாகவும் உங்களுக்கு காண்பித்துக் கொண்டேன்.

இனிவரும் 11ஆம் ஆண்டு 2026ல் குருபூஜை விழாவானது கோவை மாவட்டம் மக்கள் அனைவரும் ஏன் இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்று ஒரு அற்புத நிகழ்ச்சியாக நடத்த உங்களை வணங்கிகேட்டுக் கொள்கிறோன்.

தங்களால் முடிந்தால் உதவி செய்யலாம். 11ம் ஆண்டு குருபூஜைக்காக மட்டும் கொடிசியா வளாகத்தில் நடத்தப்படுவதாலும் வரும் மக்கள் அனைவருக்கும் அன்னவிருந்து படைக்கவும் மற்றும் இதர செலவுகளுக்காகவும் உங்களை நாடுகிறேன். இந்த வங்கிக் கணக்கில் உங்களால் உதவி செய்யலாம்.

உதவி செய்ய விரும்புவோருக்கான வங்கி விவரங்கள்
Indian Overseas Bank { IOB }
பெயர்Gd Krishnakumar
Account SB No.170 901 000 023 302
IFSC CodeIOBA 000 1709
BranchRatnapuri Branch, Coimbatore
G.P.A. No.9150 229 449
குருபூஜை விழா உதவிக்கான QR Code QR Code மூலம் உதவி செய்யலாம்